பாளை தனியார் பள்ளியில் நேற்று எட்டாம் வகுப்பு மாணவனை சகமாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்வலை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் புத்தகப் பையை சோதனை செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவைத் தொடர்ந்து இன்று சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.