பாளை சித்த மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்று மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது குறித்து கல்லூரி முதல்வர் கோமளவள்ளி அளித்த விளக்கத்தில், புதிய கட்டிடம் கட்டுவதற்கும் மாணவ மாணவிகள் தங்கும் விடுதி கட்டுவதற்கும் தமிழக முதல்வர் ரூ. 40 கோடி ஒதுக்கி இருந்தார். அதன் அடிப்படையிலேயே மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. மரங்களை மாற்றி அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டும் முடியவில்லை என கூறினார்.