நெல்லை கொங்கன்தாம்பாறை சமுதாய நலக்கூடம் அருகே கண்ணீர் அஞ்சலி வால் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், இசக்கி பாண்டி(23) என்பவர் 2013ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பச்சாண்டி(39), இன்பராஜ்(39), முத்துக்குமார்(37) ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ. 1500 அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் உத்தரவிட்டார்.