நெல்லை மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் அந்த கட்சித் தலைவர் விஜய் பிறந்தநாளை கொண்டாட இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாநகரில் உள்ள ஒவ்வொரு மரங்களுக்கும் ஒவ்வொரு தொண்டரின் பெயரை சூட்டி மரத்தை பராமரிக்க உள்ளனர். இதற்காக நேற்றிரவு ஸ்டிக்கர் தயார் செய்யும் பணி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.