நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மாஞ்சோலை ஊத்து பகுதியில் 74 மில்லி மீட்டர் மழை நாலுமுக்குவில் 67 மி.மீ காக்காச்சியில் 52 மில்லி மீட்டர் மாஞ்சோலையில் 31 மி.மீ பாபநாசத்தில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.