காய்கறிகளில் தடியங்காய் (வெள்ளை பூசனி) அதிக சத்துக்களை கொண்டது என்றாலும் தடியங்காய் விலை வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது. இன்று (ஆகஸ்ட் 1) உழவர் சந்தையில் ஒரு கிலோ தடியங்காய் ரூ. 14க்கு மட்டுமே விற்பனையான நிலையில் நெல்லை சீதபற்பநல்லூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தடியங்காய் குப்பையில் வீசப்பட்டிருந்தது. விலை வீழ்ச்சி காரணமாக வியாபாரிகள் அதை குப்பையில் வீசியதாக தெரிகிறது.