நெல்லையில் அடித்து கொண்ட முதியவர்கள்; அதிர்ச்சி வீடியோ

நெல்லை ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்கும் பணியில் பலர் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இப்பணியில் ஈடுபட்டுள்ள முதியவர்கள் 2 பேர் இன்று திடீரென கையால் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக சென்ற காவலர் ஒருவர் ஓடிச் சென்று இருவரையும் சமாதானப்படுத்தினார். மனு எழுதிக் கொடுப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பகையால் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி