கேரள மாநிலம் ஆரியங்காவில், தமிழ்நாடு அரசின் நெல்லை கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் ஆரியங்காவில் இருந்து புளியறை செங்கோட்டை, தென்காசி ஆலங்குளம் வழியாக நெல்லை வரை செல்லும் புதிய வழித்தட பேருந்தினை இன்று (ஜனவரி 3) கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் மற்றும் தமிழக அமைச்சர் சிவசங்கர் துவங்கி வைத்தனர். உடன் புனலூர் எம்எல்ஏ சுபால் மற்றும் இரு மாநில அதிகாரிகள் உள்ளனர்.