உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் இளைஞர் நீதிக் குழுமம் சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமம் உறுப்பினர் வழ. ஆரோக்கியமேரி M.L., தலைமை தாங்கி எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார். அரசு கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர், அலுவலக பணியாளர்கள், வழக்கறிஞர்கள், காவல் துறையினர், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.