பெருமாள்புரம் என்ஜிஓ காலனியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நாள்தோறும் பனம் பழத்தில் இருந்து கிடைக்கும் தவுன் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தள்ளாடும் வயதிலும் மனம் தளராமல் தனது நம்பியுள்ள மனைவி மற்றும் குடும்பத்தினரை காப்பாற்ற தவுன் விற்று வரும் முதியவரின் உழைப்பு திறமை கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அவரை தவுன் தாத்தா என அழைக்கிறார்கள்.