திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் செயலாளர் ஜெபசிங், பொருளாளர் ஆரோக்கியராஜ், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் மாவட்ட அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி விமான விபத்தில் உயிர் இழந்த 241 பேருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கூட்டமைப்பு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.