நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், தேவயானி நடித்துள்ள 3 BHK திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் குழுவினர் நெல்லை முத்துராமன் திரையரங்கிற்கு இன்று (ஜூலை 5) வருகை தந்தனர். நடிகர் சரத்குமார், நடிகை தேவயானி உள்ளிட்ட படக்குழுவினர் ஸ்கிரீன் முன்பு படம் பார்க்க வந்தவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டினர்.