மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வழ. ஆம்ஸ்ட்ராங்கின் துணைவியார் பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியின் காலண்டரை இன்று (டிசம்பர் 28) எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்கிடம் நேரில் வழங்கினார். அப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத், பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் தோழர் சுப. உதயகுமார், சமூக ஆர்வலர் அருள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.