நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று உடல்நலக் குறைவால் உயிர் இழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று டெல்லிக்கு சென்று மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.