நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை கவினின் தந்தை சந்திரசேகர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து இன்று பெற்றுக் கொண்டனர். கவின் உடலுக்கு அமைச்சர் கே.என். நேரு மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஐந்து நாள் போராட்டத்துக்குப் பிறகு கவின் உடலை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.