பாளை அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி இன்று அளித்த பேட்டியில், நெல்லை மாவட்டத்தில் யாருக்கும் டெங்கு காய்ச்சல் இல்லை என்று தெரிவித்தார். மலேரியா போன்ற 10 வகையான காய்ச்சல்களுக்கு மருத்துவர்கள் நோயாளிகளிடம் ரத்தப் பரிசோதனை நடத்தி வருவதாகவும், இதுவரை எந்த கொடிய காய்ச்சலும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், மக்கள் காய்ச்சிய நீரைப் பருகவும், அதிக கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.