திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சப் ஜூனியர் ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் முதல் பரிசு பெற்ற திருநெல்வேலி மாவட்ட சப் ஜூனியர் ஹாக்கி அணியினர் இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமாரை சந்தித்து பேசினர். அப்போது வெற்றி பெற்ற கோப்பை மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். அடுத்தடுத்து பல வெற்றிகளைப் பெற ஆட்சியர் வாழ்த்தினார்.