நெல்லை; ஆட்டோ ஓட்டுனரின் நேர்மைக்கு பாராட்டு

மேலப்பாளையம் பாத்திமா நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் காதர், வழக்கம்போல் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் ரூபாய் நோட்டு கட்டு கிடந்ததைக் கண்டார். அது 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணக்கட்டு என்பதை உறுதி செய்த அவர், நேர்மையாக அந்த பணத்தை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது நேர்மையை போலீசார் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி