சுத்தமல்லியைச் சேர்ந்தவர் முத்துராமன் (41). இவர் பேட்டை அரசு மதுபான பாரில் காசாளராகப் பணிபுரிகிறார். அவரிடம் இருந்து தண்ணீர் பாட்டில், பழங்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் கோமு (26), ஜெபக்குமார் (22) ஆகியோர்சென்றனர். மீண்டும் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து முத்துராமனை அவதூறாகப் பேசி, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முத்துராமன் அளித்த புகாரின் பேரில், பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.