நெல்லை-குமரி நான்கு வழிச்சாலையில் நாங்குநேரி அருகே பானாங்குளம் கிராமத்தின் அருகில் ஒரு சொகுசு கார் சாலையில் வேகமாக சென்றது. அதில் வாலிபர்களில் 2 பேர் காரின் மேற்கூரையின் மேல் அமர்ந்து ஆடிக்கொண்டு இருந்தனர். அதே காரில் கதவை திறந்து ஆடியபடி சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.