நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நேற்று அப்பாவி மக்கள் இருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை எஸ்.பி. வெளியிட்டுள்ளார். அதன்படி, கண்ணன் (21), உச்சிமாகாளி (20), வசந்தகுமார் (21), அந்தோணி மைக்கேல் (18), கல்யாணி (19), ராஜா (19), சுபாஷ் (19) ஆகிய ஏழு பேரும் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.