பணகுடி: 2 மாதமாக தலைமறைவானவர் கைது

பணகுடி காவல் நிலைய பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஞான சிங் கைதாகி ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. ஞான சிங்கை பணகுடி போலீஸ் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி