மேலப்பாளையம்; சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

மேலப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதால் குடும்பத்தினர் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சிரங்குடியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (21) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் பழகி அவரை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மாதேஸ்வரனை இன்று போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி