நெல்லை சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்பட்டி ஆற்றுப்படுகை பகுதியில் இன்று மாரியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் நடந்து சென்ற போது சாமிநாதன் (38) என்பவர் வழிமறித்து செலவுக்கு பணம் கேட்டு தர மறுத்த இருவரையும் மிரட்டியுள்ளார். மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சந்திப்பு காவல்துறையினர் சாமிநாதனை இன்று கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.