நெல்லை கண்டியபேரி மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் வசிக்கும் புஷ்பா என்ற மூதாட்டி கடந்த 10 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த 11 ஆயிரம் ரூபாய் பணத்தை நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக முதலமைச்சரிடம் நேற்று முன்தினம் (டிசம்பர் 30) வழங்கி இருந்தார். இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா இன்று முதியோர் இல்லத்திற்கு சென்று மூதாட்டி புஷ்பாவை பாராட்டினார்.