நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் கடந்த 27ல் கொலை செய்யப்பட்டார். இது ஆணவ கொலை என கூறப்படுகிறது. இக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெருமாள்புரத்தில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகளிடம் பாளை உதவி ஆணையர் சுரேஷ் ஒப்படைத்தார். தொடர்ந்து வழக்கின் தன்மை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.