அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று இரவு அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமி விரும்பினால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், திமுக ஆட்சியை விரட்டும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் தெரிவித்தார். கட்சிக்குள் பிரச்சனைகளை இபிஎஸ் விரும்ப மாட்டார் என்றும், சட்டமன்ற தேர்தலில் 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று இபிஎஸ் முதலமைச்சராவார் என்றும் அவர் கூறினார்.