ரயில் வந்தபோது திறந்து கிடந்த கேட்: நெல்லையில் பரபரப்பு

நெல்லை சந்திப்பில் இருந்து நேற்று இரவு 7 மணிக்கு திருச்செந்தூர் சென்ற ரயில் மேலப்பாளையம் குறிச்சி ரயில்வே கேட் அருகே வந்தபோது கேட் மூடாததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரயிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் கேட் அடைக்கப்பட்டு ரயில் கிளம்பி சென்றது. மாடு குறுக்கே வந்ததால் கேட்டை அடைக்க முடியாமல் போனதாக கேட் கீப்பர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இன்று அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி