நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே கிணறு தோண்டும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது கிணற்றுக்குள் மண்ணில் ஐம்பொன் சிலை ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து கிணறு தோண்டிய தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில் மூலக்கரைப்பட்டி போலீசார் அங்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்து ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.