நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று (மே 21) பாளையங்கோட்டையில் அளித்த பேட்டியில், நெல்லை முழுவதும் மொத்தம் 128 பள்ளிகளைச் சேர்ந்த 737 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. பள்ளி ஆட்டோக்கள் மற்றும் தனியார் வேன்களில் குழந்தைகளை அதிகளவில் ஏற்றி செல்வதை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறினால் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.