பாளையைச் சேர்ந்த மாரிப்பாண்டி, ஆகஸ்ட் 17, 2025 அன்று கேஸ் சிலிண்டர் பதிவு செய்தார். 9 நாட்கள் தாமதமாக டெலிவரி செய்த ஊழியர், பில் தொகையான ₹914.50-க்கு மேல் ₹50 கூடுதலாக வசூலித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாரிப்பாண்டி, நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று (மே 23) ஆணையம் மகாராஜா பாரத் கேஸ் நிறுவனத்திற்கு, மாரிப்பாண்டிக்கு நஷ்ட ஈடாக ₹20,000 உள்பட மொத்தம் ₹30,000 வழங்க உத்தரவிட்டது.