பாளையில் ஒருவர் மீது தாக்குதல்; 3 பேர் கைது

பாளை மணிக்கூண்டு அருகே வெட்டுவான்குளத்தில், முன்விரோதம் காரணமாக ஆறுமுகம்(39) என்பவரை கந்தசாமி(26), நம்பி நாராயணன்(24), மகாராஜன்(20) ஆகியோர் அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் பாளை போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி