பழவூர் அருகே பணப்பிரச்சனை காரணமாக ராஜபூபதி (75) என்பவரை முத்துகுட்டி (57) என்பவர் அசிங்கமாக பேசி தாக்கிய வழக்கு தொடர்பாக, வள்ளியூர் நீதித்துறை நடுவர் இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் முத்துக்குட்டிக்கு 2 வருட சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். போலீசார் புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.