நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பைச் சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ்வர் (29) என்பவரிடம், பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்ததால், பாரத் அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விக்னேஷ்வர் அளித்த புகாரின் பேரில், பாளை போலீசார் பாரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி