இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் S. குருசாமி அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் தென்காசி கோட்டம் கற்பகவிநாயகசுந்தரம், அவர்களுக்கும் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர் குறைதீர்க்கும் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் அவர்கள் பேசும்போது மின்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வருகிற 31. 05. 2023 கோடை காலம் முடியும் வரை தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதற்கு ஏதுவாக அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார்.
கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடும் இடி மின்னல் மழை பொழிவு சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது. இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
வருகின்ற காலங்களில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் பாதையில் மின்தடங்கள் ஏற்படுத்தும் மரக்கிளைகளை அப்புறப்படுத்தவும் பீங்கான் வட்டு ( Disc ) மற்றும் பீங்கான் முள் சுருள் ( Pininsulater ) பதிலாக இயற்கை இடர்பாடுகளின் போது முடிந்த வரை மின் தடங்கள் ஏற்படுத்தாமல் இருக்கும் பாலிமர் வட்டு ( Disc ) மற்றும் பாலிமர் முள் சுருள் ( Pininsulater ) பொருத்துவதற்கு தேவையான மதிப்பீடு தயார் செய்து பணிகளை உடனடியாக தொடங்குவதற்கு உத்தரவிட்டார்.
மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அனைத்து மின் நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என ஆலோசனை வழங்கினார். மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சார சம்பந்தமான அனைத்து தேவைகளையும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம்