தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் சுமூகமாக இன்று முதல் நாள் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்வுக்கு வராதவர்களின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற தேர்வில் மொத்தம் 22532 மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும் 384 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.