நெல்லை: முதியவருக்கு கொலை மிரட்டல்.. 3 பேர் கைது

பாளை கேடிசி நகரை சேர்ந்த வள்ளிநாயகம்(60) என்பவரின் மகளுக்கும் கிரீதர் என்ற இசக்கிமுத்து(35) என்பவருக்கும் இடையே உள்ள குடும்ப பிரச்சனை காரணமாக நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 17) விசாரணைக்காக நீதிமன்றம் வந்த வள்ளிநாயகத்தை கிரீதர் மற்றும் சிலர் சேர்ந்து சாட்சி சொல்லக்கூடாது என்று அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி