நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திலிருந்து மானூர் அருகே உள்ள களக்குடிக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இதில் மாரியப்பன் ஓட்டுனராகவும், ராஜா என்பவர் கண்டக்டர் ஆகவும் செயல்பட்டனர். இந்த பேருந்தில் ஏறிய ரஞ்சன் என்ற வாலிபர் கண்டக்டர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்தின் பின் கண்ணாடியை கல்வீச்சு உடைத்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.