வழிப்பறி வழக்கில் தலைமறைவான இளைஞர் கைது

தாழையூத்து காவல் நிலைய சரகத்தில் 2020 ஆம் ஆண்டு வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கபாண்டி (28) என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3½ மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். தாழையூத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி