மேலப்பாளையம் ஹாமீம் புரத்தில் உள்ள 6.5 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நேற்று மாலை மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.