நெல்லையில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மகரஜோதி (39) என்பவர், சக பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கணவரைப் பிரிந்த மகரஜோதி, கோவையைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் மகரஜோதியைக் கைது செய்துள்ளனர்.