நெல்லை தூத்துக்குடிக்கு வரும் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தஞ்சையைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையிலும், மூன்றாவது வாரத்தில் தூத்துக்குடியிலும் நிர்வாகிகளைச் சந்திக்க அவர் ஏற்பாடு செய்துள்ளார். தேர்தல் நெருங்கும் சூழலில், சட்டமன்ற தொகுதிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் இந்த சந்திப்புகள் நடத்தப்பட உள்ளன. நாளை தஞ்சையில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிகழ்ச்சியை நெல்லையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி