தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள்ளது. இந்தநிலையில் தவெக தலைவர் விஜய் பாளையங்கோட்டை கேடிசி நகரில் இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார். அதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் சென்னை விமானநிலையத்துக்கு கிளம்பி சென்றார். ரசிகர்கள் விஜயின் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்று தவெக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.