UPDATE: நெல்லை காவலர் கொலை சம்பவம்; குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்

நெல்லை டவுனின் நேற்று அதிகாலை முன்னாள் காவலரும் பள்ளிவாசல் முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாநகர போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்பொழுது நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது தலைமை காவலர் ஆனந்தை அரிவாளால் தாக்க முயன்றபோது, கொலை குற்றவாளி முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி