நெல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காதல் விவாகரத்தில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் உடல் ஐந்து நாள் உறவினர்களின் போராட்டத்திற்கு பின்பு கவின் குடும்பத்தாரிடம் இன்று (ஆகஸ்ட் 1) ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக கவினின் உடலுக்கு திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட கலெக்டர் சுகுமார், எம்எல்ஏ அப்துல் வஹாப் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.