update: முன்னாள் காவலர் வெட்டிக்கொலை; வெளியான முக்கிய தகவல்

நெல்லை டவுன் தொட்டிபாலத் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி என்பவரை இன்று (மார்ச் 18) அதிகாலையில் தொழுகை முடித்துவிட்டு வந்த நிலையில் மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளது. 

இவர் பள்ளிவாசலின் முத்தவல்லியாக தற்போழுது பணியாற்றி வருகின்றார். இவர் வீட்டின் அருகே இருந்தவருக்கும் இவருக்கும் நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருக்கும் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக பற்றி வந்த ஜாகிர் உசேன் பிஜிலி காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி