update: இயக்குனர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

நெல்லை மாநகர பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் மற்றும் ஆசிரியரை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் இவ்வாறு பள்ளியில் மோதல் உள்ளதாக ஏற்கனவே பெற்றோர்கள் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் முத்து பழனிசாமி இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி