நெல்லை: பேராசிரியரை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

நெல்லை பேட்டையைச் சேர்ந்த 34 வயது தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், செல்போன் செயலி மூலம் ₹30,000 கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்தியுள்ளார். இருப்பினும், மர்ம நபர்கள் அவரது புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் ஆபாசமாக சித்தரித்து, கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பேராசிரியர், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி