முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டமான தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம், ரூ 1000 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளங்குழியில் திறக்கப்பட்ட தண்ணீர் காரியாண்டி அருகே கருமேனியாறு அணைப்பகுதியை அடைந்தது. இந்நிலையில், பொன்னாக்குடியில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு உபரி நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாயினை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்.