நெல்லை: தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி (எ) மகேஷ் (43) என்பவரை, அவரது மகன் மகாராஜன் (எ) மனோ (18) இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளான். பள்ளிப் படிப்பை முடிக்காமல் ஊர் சுற்றியதாகக் கூறப்படும் மனோ, இன்று (ஜூன் 4) காலை போதையில் தகராறு செய்த தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே மகேஷ் உயிரிழந்தார். தலைமறைவான மனோவை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி